Feed Item
·
Added article

 உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்த போது

 ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொல்லி, அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் யார் தெரியுமா?…

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் அம்மாவுடன் வறுமையில் வாடிய போது சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவு அருந்தினர். இதை எம்.ஜி.ஆர் மறக்கவே இல்லை.

எம்.ஜி.ஆர் எப்படி பலருக்கும் உதவி செய்தாரோ அதுபோல அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பலரும் உதவி செய்துள்ளனர். அந்த எண்ணம்தான் அவரை பின்னாளில் வள்ளலாக மாற்றியது.

 ஏழ்மையில் அவரின் குடும்பம் வாடிய போது அவருக்கு பலரும் உதவியுள்ளனர். நாடகத்தில் நடித்து வந்த போதும் அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு பலரும் உதவினர்.

நாடகத்தில் நடித்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நாட்டின் முதலமைச்சராகாவும் மாறியவர்.

அந்த ராமன் குட்டிதான் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் டீ கடை வைத்திருக்கிறார் என்பது தெரிந்ததும் எம்.ஜி.ஆர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். வறுமையில் வாடிய போது உதவிய ராமன் குட்டியின் கையில் அவர் போதும் போதும் என சொல்கிற அளவுக்கு பொருள் உதவி செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.

  • 733