அருள்தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோவில் தென்காசி.
தென்றல் தவழும் தென்காசியில் பாண்டிய மன்னன் பராக்கிரமபாண்டியனால் அமைக்கப்பட்டது பிரம்மாண்டமான இந்த இராஜகோபுரம்.இந்த இராஜகோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க அதிசயம் காத்திருக்கிறது.
பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது கோபுர வாசலை கடந்து உள்ளே செல்லும் போது கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று பின்புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் எதிர் திசைகளில் வீசுவதை இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயத்தை உணருவீர்கள்.