சிந்திப்போமா?
நம் பலத்தைப் பற்றி மட்டுமே யோசித்து, அதைப் பற்றிப் பேசி பிரஸ்தாபித்து பலவீனங்களைக் கண்டு கொள்ளாமலேயே இருந்துவிடுவதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.
சமூக ஊடகங்கள் வந்த பிறகு அது இன்னமும் அதிகம். நம்முடைய தாழ்வுணர்ச்சியை எல்லாம் மறைத்துக் கொண்டு அடுத்தவனைக் கலாய்த்துச் சிரித்து வெறுமனே எண்டர்டெயின்மெண்ட்டாக மட்டுமே வாழ்க்கையை முட்டுச் சந்துக்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். மெல்ல மெல்ல இதையெல்லாம் விட்டு தப்பித்து விட வேண்டும்.
பலம், பலவீனங்கள் என எல்லாவற்றையும் அப்பட்டமாகப் புரிந்து கொண்ட வாழ்க்கைதான் தேவையானதாக இருக்கிறது. குறைகளை மூடி மறைத்து வெறுமனே பலங்களை மட்டும் கடை விரிக்கிற அல்லது பலம் எனக் கருதி பாவனை செய்கிற வெர்ச்சுவல் உலகத்திலிருந்து விடுபடுவதுதான் சரி.