Feed Item
·
Added article

ஏப்ரல் 10-ம் தேதி ’எல்.ஐ.கே’ திரைப்படம் வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் திட்டமிட்டப்படி முடிவடையவில்லை. இதனால் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் பரவின. இறுதியாக விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மூவரும் இணைந்து ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில் ஏப்ரல் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த தேதியில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

சீமான், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதனை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

  • 62