மொத ராத்திரி படம் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை நடிகை அனிஷ்மா அனில்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காட்சி தனக்கு பல வகையில் ஆறுதல் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
அந்த ஒரு காட்சியை ஏன் நீக்கினீர்கள் என்று இயக்குனர் ராஜா கருப்புசாமியிடம் அவர் செல்லமாக கோபத்தோடு கேட்டுள்ளார். ரசிகர்களும் அந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனிஷ்மாவின் நடிப்பு முக்கிய காரணம் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.