இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான சூழல்கள் அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
ரிஷபம்
தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். கற்பனை துறைகளில் மதிப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அமைதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வும், முன்னேற்றமும் உருவாகும். பேச்சுகளில் சில அனுபவம் வெளிப்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த தாமதங்கள் புரியும். மனை விருத்திக்கான உதவிகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
குடும்ப உறுப்பினர்கள் மூலம் தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதியும், ஒற்றுமையும் நிலவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் உண்டாகும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண் பச்சை
துலாம்
எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மூலம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகள் மூலம் மனதில் அமைதியின்மை உருவாகும். நட்பு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். மாற்று மருத்துவம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
தனுசு
தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற சாதகமான சூழல் உண்டாகும். மனதில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமுக பணிகளில் சில அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆராய்ச்சி பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். கடன் செயல்களில் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோக விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பொழுது போக்கு செயல்கள் மூலம் கையிருப்புகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி
மீனம்
மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சிகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்