பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.
மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன.
தீவிர சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கே.பாக்கியராஜ் உடல்நிலை கவலைக்கிடம் என இன்று காலை தகவல் வெளிவந்துள்ளது. சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.