Feed Item
·
Added a post
  • புத்தரின் வருகைக்காக காத்திருந்தனர் சீடர்கள். சிறிது நேரத்தில் புத்தர் வந்தார்.
  • அவரது கையில் கைக்குட்டையை விட கொஞ்சம் பெரிய துணி இருந்தது.
  • சீடர்களுக்கு எதிரே இருந்த மேடையில் அமர்ந்த புத்தர், எதுவும் பேசாமல் கையில் இருந்த துணியில் முடிச்சுகளைப் போடத் தொடங்கினார். 5 முடிச்சுகள் போட்டார்.

தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்த சீடர்களை பார்த்த புத்தர்,

"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப் போகிறேன்",அதற்கு முன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன், என்றார்.

  1. என்னுடைய முதல் கேள்வி; இப்போது முடிச்சுகள் விழுந்துள்ள இந்தத் துணி, முன்பிருந்த அதே துணிதானா? முடிச்சுகள் இல்லாததும், உள்ளதும் ஒன்றுதானா?’ என்று கேட்டார்.

புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து, ‘சுவாமி! ஒரு வகையில் முன்பிருந்ததும், இப்போது இருப்பதும் ஒன்றுதான். ஆனால் அதில் இருக்கும் முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு.

'முன்பு இருந்த துணி சுதந்திரமானது. இப்போதுள்ள துணி முடிச்சுகளால் அடிமைப்பட்டு கிடக்கிறது’ என்றார்.
உடனே புத்தர்,‘சரியாக சொன்னாய்.எவரும் இயல்பில் பிரச்சினை இல்லாதவர்கள். 
ஆனால் முடிச்சுப்போட்டுக்கொண்டு, சிக்கலில் சிக்கி,அதற்கு அடிமைப்பட்டு போய் விடுகிறார்கள்.  

இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.

பின்னர் சற்று நேரம் அமைதியாக இருந்த புத்தர்,

2. ‌‘என்னுடைய இரண்டாவது கேள்வி, இந்த முடிச்சுகளை அவிழ்க்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

இப்போது இன்னொரு முக்கிய சீடன் சாரி புத்தன் எழுந்து நின்றான். ‘

"குருவே! அந்த முடிச்சுகளை அவிழ்க்க, நான் அருகில் வர அனுமதிக்க வேண்டும்.
முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்க வழியில்லை…என்றான்

‘சரியாகச் சொன்னாய். என்றார் புத்தர்.

அதுதான் வாழ்க்கை. அது தான் வாழ்க்கையின் ரகசியம். நம்முடைய சிக்கல்களுக்கு நாமே காரணம். 
நம்மை அறியாமல்,நாம் போட்டுக் கொள்ளும் முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறோம், என்றார் புத்தர். 

இதுதான் புத்தர் கூறும் பாடம்.

  • 13