Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விமர்சித்தவர்கள் உங்கள் உதவிகளை நாடுவார்கள். தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியம் கைகூடும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மனதில் இருந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

ரிஷபம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

மிதுனம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும். வீடு வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கடகம்

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப் பொழிவுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். முயற்சி சாதகமாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

தனுசு

தேக ஆரோக்கியம் பொழிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

தனவருவாய் தேவைக்கு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கமிஷன் பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதில் இருந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 188