விசு படத்தில் வெயிட்டான கேரக்டர் : விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?
பழம்பெரும் நடிகை ஒருவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசு நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்த நடிகை இளவரசியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குடும்பத்தின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற படம் தான் சம்சாரம் அது மின்சாரம். விசு, ரகுவரன், பாண்டியன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும், பிரச்சனை, மனவருத்தங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்பதால், மனோரமாவை படத்தில் இணைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் அசத்திய மனோரமான கண்ணம்மா என்ற கேரக்டரில் அசத்தியிருந்தார். குறிப்பாக ‘’கம்முனு கெட’’ என்று அவர் சொல்லும் வசனம் தற்போதுவரை பிரபலமாக உள்ளது.
அதேபோல் பிரிந்த கூட்டு குடும்பத்தை இணைக்க பாடுபடும் மருமகளாக லட்சுமி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் அம்மையப்பன் முதலியார் கேரக்டரில் நடித்த விசுவின் திமிர் பிடித்த மகள் சரோஜினி கேரக்டரில் நடித்தவது நடிகை இளவரசி.
படத்தில் இவரை பார்த்தாலே பலருக்கும் கோபம் கோபமாக வரும். தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2001-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாக சீரிவரும் காளை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு வங்கி அதிகாரியை திருமணம் செய்துகொண்ட நடிகை இளவரசி, கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
