நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணுடன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவிடம், ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பெரிய சவால் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாதவிடாய் என்பது சாக்குப்போக்கு கிடையாது. நான் பெரும்பாலான பாடல்களில் நடனமாடும்போது மாதவிடாய் காலத்தில்தான் இருந்தேன்.
உடல்ரீதியான தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மாதவிடாயைக் காரணமாகச் சொல்லக்கூடாது” என்று கூறியிருந்தார். மருத்துவப் படிப்பை முடித்துள்ள ஸ்ரீலீலாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மருத்துவம் படித்த ஒருவருக்கு மாதவிடாய் வலி, ஒரு பெண்ணின் அன்றாடச் செயல்பாடுகளை எவ்வளவு பாதிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும், ‘இது ஒரு சாக்குப்போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்கும் மில்லியன் கணக்கான பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்றனர்.