திருமணமான புதிதில் தான் மணிரத்னத்தை விட செல்வாக்காக இருந்ததாக அவரது மனைவி நடிகை சுஹாசினி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
🌹சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதியராக வலம் வரும் மணிரத்னம் - சுஹாசினி ஜோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுஹாசினி, தன் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
🌹நடிகை சுஹாசினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாக சுஹாசினி கூறியுள்ளார்.
🌹அவர் கூறும்போது, "எங்களுக்குத் திருமணம் ஆனபோது, நான் ஏறக்குறைய 90 படங்களில் நடித்து முடித்திருந்தேன். ஆனால், மணிரத்னம் அப்போது 5 அல்லது 6 படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் ₹15,000 மட்டுமே இருந்தது. ஆக, திருமண சமயத்தில் அவரை விட நான் தான் பெரிய வெற்றிகரமான நபராக இருந்தேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.