இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். பயணம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
ரிஷபம்
செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தூர பயணங்களில் கவனம் வேண்டும். நிம்மதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கன்னி
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். பெற்றோர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்