Feed Item
·
Added a news

உலக செய்திகள்

1. போலந்து துப்பாக்கிச் சூடு

போலந்து நாட்டின் கிராக்கோவ் நகர மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

2. சப்பான் நிலநடுக்கம்

சப்பான் நாட்டின் மத்திய பகுதியில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது, ஐச்சி மற்றும் சிசுவோக்கா பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

3. ஏமன் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு

ஏமன் நாட்டின் ஊத்தி குழுவினர் ரியாத் நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை சவுதி வான் பாதுகாப்பு படை இடைமறித்து அழித்தது.

கனடா செய்திகள்

4. கனடா - அமீரக வணிக ஒப்பந்தம்

கனடாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வர்த்தகத் தடைகளைக் குறைக்கும் விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

5. கனடா அணி வெற்றி

மான்ட்ரியல் அணி டொராண்டோ அணியை 4-2 என்ற கணக்கில் வென்று, தொடர்ந்து பத்து ஆட்டங்களில் புள்ளிகளைப் பெற்றது.

இந்திய செய்திகள்

6. தீபாவளி கொண்டாட்டம்

குடியரசுத் தலைவரும் பிரதமரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர், பிரதமர் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதாகக் கூறினார்.

7. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஒப்பந்தம்

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டமான ஒரைசன் ஐரோப்பாவில் இந்தியா இணைவதற்கான பேச்சுகளை நிறைவு செய்தன.

8. புற்றுநோய் மருந்துகள் விலை குறைப்பு

137 புற்றுநோய் மருந்துகளுக்கான புதிய விலைகள் நவம்பர் 9 முதல் நடைமுறைக்கு வருகின்றன, வணிக இலாப வரம்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை செய்திகள்

9. அனுராதபுரம் போராட்டம்

அனுராதபுரம் புனித நகர மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்து புத்த பிக்குகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர், அரசாணையைத் திரும்பப் பெறக் கோரினர்.

10. இலங்கையில் தீபாவளி வாழ்த்து

இலங்கை அதிபர் இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார், ஒளி இருளை வெல்வதையும் அறிவு அறியாமையை வெல்வதையும் குறிப்பிட்டார்.

  • 74