Feed Item
·
Added a post

காலையில் எழுந்ததும் முதல் முதலில் நம் வயிற்றுக்கு செல்லும் இந்த டீ ஆனது நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்குத்தான் இந்த மஞ்சள் டீ. இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு அத்தனை நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி. உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இல்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் போன்று அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது.

இது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கும் செல்களின் அளவை கூட இந்த மஞ்சள் குறைத்து விடும். இன்று வரைக்கும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நோய்க்கு கூட வருவதற்கு முன் காக்கும் மருந்தாகவும், வந்த பின் அதன் தாக்கத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் பயன்படுகிறது என்றால் நீங்களே நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்: மஞ்சள் -1/2 டீஸ்பூன், மிளகு – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீரகம் – 1/4 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு டீ கப்பில் மஞ்சள், மிளகு, சீரகம், உப்பு, நெய் அல்லது வெண்ணெய் இவை அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து ஊற்றியவுடன், ஒரு சிறிய தட்டு வைத்து அந்த டீ கப்பை மூடி விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்ததும் அதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்தும் பொருட்களும் கரைந்து உருகி இருக்கும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு அடியில் தங்கியிருக்கும் மிளகு, சீரகம் இது எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து விட்டு மிதமான சூட்டிலே இதைக் குடித்து விடுங்கள். ஆறிய பிறகு இதை குடிக்கக்கூடாது.

இதை தினமும் ஒரு முறையாவது குடித்து வந்தால் தொண்டை சார்ந்த எந்த பிரச்சினையும் உங்களை நெருங்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மஞ்சள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவர்கள் இதை தவிர்த்து விடலாம்.

  • 41