ஹாலிவுட் கதாநாயகி செண்டாயா 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார். 29 வயதான இவர் மூன்று பெரிய படங்கள் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தி டிராமா, தி ஒடிசி மற்றும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே ஆகிய படங்கள் மூலம் இந்த வசூல் சாதனை நிகழ்ந்துள்ளது. டிசம்பர் 18-ல் வெளியாகும் டியூன் பாகம் 3 மூலம் இந்த சாதனை மேலும் உயரும்.
மேலும் அலெக்ஸ் கார்லண்ட் இயக்கும் புதிய அறிவியல் படத்தில் செண்டாயா நடிக்க உள்ளதாக இன்று அறிவிப்பு வந்துள்ளது. ஹாலிவுட்டின் கவர்ச்சி ராணியாக திகழும் செண்டாயாவின் தொடர் வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
