Feed Item
·
Added article

ரஜினி ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த நேரம். காலையில் ஒரு படம். மாலையில் ஒரு படம். இரவு வேறொரு படம். ரஜினியின் கால்ஷீட் கிடைக்காதா என தவமிருந்தவர்கள் பலர்.

ஆனாலும் ரஜினிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை சக போட்டியாளர்களால் தடுக்க முடியவில்லை. சிலர் அப்போதைய பெரிய தலைவரோடு சிண்டு முடிந்து மோதல் வரவழைக்கப்பார்த்தனர். அப்படி மறைமுக மோதல் அந்த தலைவருக்கும் ரஜினிக்கும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.

அவர் நினைத்தால் எதுவும் செய்யலாம்...அப்படி ஒரு நேரத்தில் ரஜினி டென்ஷனுக்கு ஆளானார். இது வரை கஷ்டப்பட்டு எல்லாம் வீணாகிப்போகுமோ என்கிற கலக்கம் ஏற்பட்டது..ரஜினி அப்போது கண்ணதாசன் என்கிற தத்துவஞானியிடம் செல்கிறார்.

கண்ணதாசன் ஒரு சிறந்த அறிவுரையை வழங்குகிறார். மௌண்ட் ரோடில் ஓடு என்று கூட சொன்னார் என சொல்வதுண்டு. இதன் மூலம் அந்த பெரிய தலைவர் ரஜினி தன் கட்டுப்பாட்டிலேயே இல்லை என உணரவேண்டுமென்பதாக நினைத்தார் கண்ணதாசன்.

சில சம்பவங்கள் அரங்கேற ஸ்ரீப்ரியா மூலமாக பாலச்சந்தர் அறிந்து ரஜினியிடம் பேசி அவரை பக்குவப்படுத்தினார்.

ரஜினி நாளடைவில் தெளிவடைந்தார். தர்மயுத்தம் ஷுட்டிங். ரஜினி ஷாட் இடைவேளையில் அமர்ந்திருக்க அன்று இரவு ரஜினிக்கு பௌர்ணமியன்று டென்ஷன் உருவாவதாக காட்சி எடுக்க வேண்டும். துணை இயக்குனர்கள் அவருக்கு அருகே செல்லக்கூட பயந்தனர். ஆர்.சி.சக்தியே ஷாட் பற்றி சொல்ல ரஜினி சிரித்து ஓகே சொன்னதும் எல்லோருக்கும் பயம் அகன்றது.

பில்லாவில் கண்ணதாசனுக்கு ரஜினி நன்றி தெரிவிக்க, கண்ணதாசன் ரஜினிக்காக இப்படி எழுதினார்.

"நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு. ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு....என்னப்பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க...இப்பென்ன செய்வாங்க...

நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பாடு பட்டு பேர சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க

யாரு சொல்லி என்ன பண்ணா

நானும் இப்போ நல்லா இருக்கேன்

உங்களுக்கும் இப்போ சொன்னேன்

பின்னாலே பார்க்காத முன்னேறு..முன்னேறு...

ஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு

ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே

ஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு

ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே

மூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்

நம்பிக்கையை மனசிலே வைச்சு பின்னாலே பார்க்காம முன்னேறு..முன்னேறு...

நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு

ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு

என்னை பத்தி ஆயிரம் பேரு

என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க"

அன்று கண்ண தாசனின் தீர்க்கதரிசனம் பின்னாளில் மெய்யானது.

ரஜினி தொழிலில் வளர்ந்து தன் கல்யாணப்பத்திரிக்கையை கண்ணதாசன் வீட்டுக்கு சென்று கொடுக்கும் போது கவிஞர் இல்லை. அவர் வார்த்தைகள் இன்றும் இருக்கின்றன.

  • 522