Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப் பங்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

ரிஷபம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை ஆபர ணங்கள், வாங்குவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: விஐபிகளின் உதவியுடன் சில பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நீண்டநாட்களுக்குப் பிறகு மனம்விட்டுப் பேசுவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: திடீர் உடல்நலக்குறைவு, மனச்சோர்வு வரக்கூடும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்ற பிறகே முடியும். குடும்பத்தினரிடம் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.

சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்கள் இன்று முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கை களில் நல்ல மாற்றம் தெரியும். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி பிறக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

துலாம்: தொட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். நண்பர்கள், விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.

விருச்சிகம்: மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு அதி கரிக்கும். ஆன்மிகக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பணவரவு உண்டு.

தனுசு: எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி, பொறாமை அதிகரிக்கும்.

மகரம்: உங்கள் பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கடனைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: நீண்டகால பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

  • 37