Feed Item
·
Added a post

ஸ்ரீ முருகனின்அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஒரு முறை TMS தங்கி இருந்த போதுஒரு இஸ்லாமிய சிறுவன் ஒரு முருகன் பாடலை பாடிக்கொண்டு போனதை கேட்டு விட்டுமெய் மறந்து போனார்… அவனை கூப்பிட்டு அந்த பாடல் முழுவதையும் பாட சொல்லி கேட்டு எழுதி கொண்டு சென்றார்,. சென்னை வந்து., .. அந்த பாடல் முழுவதையும் அழகாக இசை அமைத்து பாடினார். .. அது இசைத்தட்டாக வந்து அனைவர் உள்ளத்தையும்கொள்ளை கொண்டு இன்று வரை நீங்கா இடம் பிடித்து வாழ்ந்துகொண்டுடிருக்கிறது

சுமார்எட்டு நிமிடங்கள் அந்த பாடல் நம் உள்ளத்தைஉருக்கி விடும்.. அந்த பாடல் தான் . உள்ளம் உருகுதய்யா. . முருகா . …. உள்ளம் உருகுதைய்யா ____என்ற அற்புதமான, என்றும் சிரஞ்சீவியானஅந்த பாடல்.

ஒரு இஸ்லாமியசிறுவன் இந்த அற்புத பாடலைஎப்படி பாட முடியும் என்று நம்பாத அவர் அதன் மூலத்தை தேடி அலைந்தார்….

கடைசியாக சென்னை பாரிசில் உள்ள காளிகாம்பாள்கோவில் கல் வெட்டு ஒன்றில் இந்த கவிதை முழுதும் செதுக்க பட்டிருந்ததை கண்டு வியந்து போனார்…. ஆண்டவன் பிச்சி அம்மையார் என்கிற மரகதவள்ளிஅம்மையார்…, இந்த அருமையான பாடலை இயற்றி உள்ளார்.

  • 51