முகப்பருக்களுக்கு காரணம்
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். இவை தவிர வெளியில் செல்லும் போது முகத்தில் படியும் தூசுகள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கிவிடும்.
பருக்களைக் கிள்ளி அல்லது கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புண்டு என் பதால் இயன்ற அளவில் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி.
பொடுகுத்தொல்லை, மலச்சிக்கல், அடுத்தவர் உபயோகித்த சோப், டவல், படுக்கையை பகிர்தல், சுகாதார மில்லாத நீர், அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம், செரிமான கோளாறு, முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், போதிய நீர் குடிக்காதது, இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இதற்கு காரணமான சொல்லலாம்
இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் கண்டிப்பாக முகப்பருக்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக் கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தக்காளி
பழுத்த தக்காளியைக் கூழ்போல் மசித்து கொள்ளவும். சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். மசித்த தக்காளி கூழை எடுத்து முகத்தில் கீழி ருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகப் பருக்கள் வருவதைத் தடை செய்யும்.
பூண்டு,வெங்காயம்
பூண்டு, வெங்காயச்சாறு இரண்டுமே முகப்பருவை உண்டாக்கும் அழுக்குகளை நீக்கும் வல்லமை கொண்டது. பூண்டை நசுக்கி சாறு பிழிந்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு தேய்த்து வந்தால் முகப்பரு பெரிதாகாமல் மறையும். இதே போன்று சின்ன வெங்காய சாறையும் தடவி வரலாம்.
வாழைப்பழத்தின் தோல்
வாழைப்பழத்தின் தோலுடன் பசுவின் பாலேடு அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வரவும். தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும். கருமை நிறமும் தங்காது.
