Feed Item

பேச வேண்டிய நேரத்தில்

பேச வேண்டியவன்

ஏன் பேசவில்லை

என்பது புரியவில்லை எனக்கு.

பேச வேண்டாத நேரத்தில்

ஏன் பேசுகின்றான் என்றும் புரியவில்லை.

காரண காரியமில்லாமல்

எப்போதுமே பேசிக் கொண்டிருப்பவனை

பொருட்படுத்தாமலேயே கடந்து விடுகிறேன்.

எப்போதுமே பேசாதவனை

புரிந்து கொள்வது

சுலபமாக இருக்கிறது எனக்கு.

-

நிதானம் தவறாமல்

அளந்து பேசுவது உத்தமம்

பேச்சு பேச்சாக இருந்தால் மட்டுமே அழகு

  • 825