Feed Item
·
Added article

அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை சாய் பல்லவி. எப்படி ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் டாப் நடிகையாக மாறினாரோ அதே போல சாய் பல்லவிக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ரன்பீர் கபூர், யஷ் உடன் இணைந்து ராமாயணா படத்தின் மூலம் இந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாவார் சாய் பல்லவி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக அமீர்கான் தயாரிப்பில் அதற்கு முன்னதாக வரும் மே 1ம் தேதியே பாலிவுட்டில் சாய் பல்லவி அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பு டீசருடன் வெளியாகி விட்டது.

அமீர்கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'ஏக் தின்' (Ek Din) எனும் காதல் படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சாய் பல்லவி ஜுனைத் கானுக்கு லிப் லாக் அடித்தது போன்ற போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. உண்மையாகவே சாய் பல்லவி லிப் லாக் கொடுத்தாரா? இல்லையா?

அமரன் படத்தின் வெற்றி: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த்தின் வீர மரணம் மற்றும் அவரது மனைவியின் தியாகம் திரையில் ரத்தமும் சதையுமாக காட்டப்பட்ட நிலையில், அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. அஜித் குமாரையே பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயன் பின்னுக்குத்தள்ளினார். அந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக சாய் பல்லவியின் நடிப்பு இருந்தது.

2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை பிரம்மாண்டமாக 2 பாகங்களாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. அமரன் படத்துக்குப் பிறகு இந்த ஒரு படம் மட்டும் தானா? என நினைத்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக அமீர்கான் மகன் ஜுனைத் கான் உடன் ஒரு படத்தில் நடித்தே முடித்து விட்டார் சாய் பல்லவி என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் உள்ள சில விஷமிகள் ஜுனைத் கான் உடன் அருகே அமர்ந்து இருக்கும் போட்டோவை அப்படியே ஏஐ உதவியுடன் சாய் பல்லவி அவருக்கு லிப் லாக் அடிப்பது போல எடிட் செய்து மாற்றி அதை சோஷியல் மீடியாவில் அதிகம் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி தனது தங்கையுடன் பீச்சில் இருந்த போட்டோக்களை வைத்து அவர் பிகினியுடன் சுற்றுகிறார் என்று பரப்பியது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவியின் வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகளின் பிஆர்கள் தான் இந்த வேலையை தீயாக பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

  • 28