ஒண்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துகளில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கி தவித்த ஓட்டுநர்கள் அவசர மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.