ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் அவ்வப்போது உருவாகி வருகிறார்கள். அந்த வகையில், அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி, மும்பையில் வளர்ந்தவர். பள்ளிப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து புச்சி பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடித்த 'உப்பெனா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வெறும் 17 வயதில் 'பேபம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி, தனது நடிப்பாலும் கியூட் லுக்காலும் ரசிகர்களை கவர்ந்தார். 'உப்பெனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீர்த்தி ஷெட்டிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
உப்பெனா' வெற்றிக்குப் பிறகு 'ஷ்யாம் சிங்கா ராய்', 'பங்கார்ராஜு', 'தி வாரியர்', 'கஸ்டடி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தெலுங்கில் அவரது மார்க்கெட் சற்று பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள சினிமா பக்கம் கவனம் செலுத்திய கீர்த்தி ஷெட்டி, 'ஏஆர்எம்' திரைப்படத்தின் மூலம் மலையாளத்திலும், 'வா வாத்தியார்' படத்தின் மூலம் தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்திலும் நடித்தார்.
தற்போது 'ஜினி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் தனது சினிமா பயணத்தை மீண்டும் வேகப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கருப்பு நிற உடையில் விதவிதமான போஸ்களில் கீர்த்தி ஷெட்டி கொடுத்துள்ள இந்த போட்டோஸ், இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது ஸ்டைலிஷ் லுக் மற்றும் கிளாமர் அப்பீல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சினிமாவில் மீண்டும் பிஸியாகி வரும் கீர்த்தி ஷெட்டிக்கு மத்தியில், இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.