Feed Item
·
Added article

நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் பிரபுதேவா. துவக்கத்தில் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அப்படி அவர் நடனமாடிய எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இவருக்கென ரசிகர்களும் உருவாக்கினார்கள். குறிப்பாக இவர் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறி தமிழ் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களை பிரபுதேவா இயக்கினார்..

அப்படியே பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கானை வைத்து சில படங்களை இயக்கினார். தற்போது நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான், மும்பையில் உள்ள தனது வீடுகளை சமீபத்தில் பிரபுதேவா விற்றது தெரியவந்திருக்கிறது.

அவருக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளை அவர் விற்பனை செய்துள்ளார். தென் மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள பிரம்மாண்ட குடியிருப்பில் 32 மற்றும் 33வது தளங்களில் இருந்த அவரின் இரண்டு வீடுகளைத்தான் அவர் விற்பனை செய்திருக்கிறார். 2012ம் வருடம் வாங்கிய இந்த இரண்டு வீடுகளும் தற்போது 14.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது.

  • 43