இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ரிஷபம் : மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.
மிதுனம் : வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம் : முடியாமல் போன காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம் : தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கன்னி : மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளுடன் இருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம் : பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனநிம்மதி தரும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
விருச்சிகம் : உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு : மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம் : பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கும்பம் : சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வீடு வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மீனம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.