பாப் பாடகியில் இருந்து நடிகையாக மாறியுள்ள சார்லி எக்ஸ்சிஎக்ஸ், ஹாலிவுட் ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் புதிய படத்தில் இணைந்துள்ளார். வாட் ஹேப்பன்ஸ் அட் நைட் என்ற கோதிக் உளவியல் திரில்லர் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இன்று அக்டோபர் 26 அன்று இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்த படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பீட்டர் கேமரூனின் நாவலை அடிப்படையாக கொண்ட இந்த கதை, குழந்தையை தத்தெடுக்க பனி மூடிய ஐரோப்பிய நகருக்கு செல்லும் அமெரிக்க தம்பதியின் மர்ம அனுபவங்களை சொல்கிறது. மேட்ஸ் மிக்கல்சன், பாட்ரிசியா கிளார்க்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
சார்லி எக்ஸ்சிஎக்ஸ் ஏற்கனவே தி மொமென்ட், 100 நைட்ஸ் ஆப் ஹீரோ போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஸ்கோர்செஸி போன்ற மிகப்பெரிய இயக்குனரின் படத்தில் இணைவது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படியாக கருதப்படுகிறது. வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.