Feed Item
·
Added article

அமலா பால் முதல் திருமணம் பெரிதாக ஒத்துவராத நிலையில், 2வதாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் டிசம்பர் மாத குளிரை கொண்டாட பனி பிரதேசத்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவும், அமலா பாலுக்காக ஜகத் தேசாய் செய்த சாகசங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நடிகை அமலா பால் ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து இலை எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா (Asatana) எனும் இடத்திற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

  • 89