விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பொதுவாகவே, கொரோனா காலகட்டத்துக்கு முன் காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிய பல நாட்டு மக்கள், இப்போது, எந்த உணவு விலை குறைவு என்று பார்த்து வாங்கத் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
Dalhousie பல்கலையும், Caddle என்னும் ஒன்லைன் தரவுத் தளமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வொன்றைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஐந்தில் நான்குபேர், இப்போது தங்களுக்கு அதிக பாரமாக உள்ள செலவு உணவுப்பொருட்கள் வாங்குவதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பாதிபேர், விலைவாசி உயர்வு காரணமாக, தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது, கூப்பன்கள் பயன்படுத்துவது அல்லது ஒன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் பொருட்கள் வாங்குவது என தாங்கள் உணவுப்பொருட்கள் வாங்கும் விதமே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
செலவுகளைக் குறைப்பதற்காக, வெளியே சாப்பிடச் செல்வது குறைந்துள்ளதாகவும், பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்ணுவதாகவும், brand பார்த்து எந்த பொருள் விலைகுறைவாக உள்ளது என்பதைக் கவனித்து வாங்குவது, ஐஸ்கிரீம் போன்ற விடயங்களையும், மாமிசம், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை குறைவாக வாங்குவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
