Feed Item
·
Added a post

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக ஏன் போகக் கூடாது என்று தெரியுமா?

பூனைகள் குடியிருப்பு பகுதிகளில் வாழும்.மன்னர் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால் இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள் சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, வந்த திசையை மாற்றி வேறு திசையில் குதிரைகளில் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..???பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

  • 46