Feed Item
·
Added article

தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கும்பகோணத்தில் பிறந்த இவர், பொன்மகள் வந்தாள், வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு, வேலைக்காரன் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர்.

சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளக்கார துரை, முத்தின கத்திரிக்காய், ஸ்கெட்ச், நாடோடிகள்'போன்ற பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனாவிற்கு நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்களில், கருப்பும் சிவப்புமான பாரம்பரியப் புடவையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். குறிப்பாக, கையில் மல்லிகைப் பூவை வைத்தபடி, கண்களை மல்லிகைப் பூவால் கட்டிக்கொண்டு நனைந்த நிலையில் அவர் கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது நடிகை அர்ச்சனாவிற்கு 41 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இணையத்தில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருவதால் வரும் விமர்சனங்களை கண்டுகொள்ளாத இவர், நான் கவர்ச்சியாக போட்டோ போடுவது என்னோட விருப்பம். பிடித்திருந்தால் பாருங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஸ்க்ரோல் பண்ணிட்டு போங்க, அதற்காக கமெண்ட் பாக்ஸில் வந்து தவறான கமெண்ட்ஸ் போடுவது சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர் மல்லிப்பூவுடன் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் ரீல்ஸுக்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

  • 321