இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும்.
மிதுனம்: மனதை வாட்டிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க ஏற்பாடு செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
சிம்மம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். லாபம் பார்க்கலாம்.
துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீடு, மனை தொடர்பான வழக்கில் இழுபறி நிலை நீடிக்கலாம். திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று தொடர்ந்து அலைச்சல், உடல்சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
மகரம்: புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உடல்நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் வருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.