Feed Item
·
Added a news

கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய உள்ளது.

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை தற்போது உள்ளது.

இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

தற்போது இந்த Bill C-3 என்னும் 2025ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமைச் சட்டத்தின் மசோதாவுக்கு மன்னர் தரப்பிலிருந்து ஒப்புதலும் கிடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது தற்போது கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த விதிகள் அமுலுக்கு வரும்போது, வெளிநாட்டில் பிறந்த கனேடிய குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கனேடிய குடியுரிமை கிடைக்கும் என்பதே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்ல செய்தியாகும்.

  • 60