குடும்பஸ்தன் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு சாதாரண குடும்பத்து மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர், 'Anaganaga Oka Raju' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆந்திரா டூ தெலுங்கான என்ற பாலுக்கு குட்டி பாவடை போட்டுக்கொண்டு 'ஊ சொல்றியா மாமா' பாடல் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
