மும்பையில் பிறந்த நடிகை மீரா வாசுதேவன் சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில், வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் ஆகியோருடன் நடித்தார். அப்படத்தில் பாபி என்னும் ஒரு பிடிவாதமாக கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்ற மீராவிற்கு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதை பெற்றார்.
அதன் பின் அஅறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலேயே உள்ளிட்ட தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர். அதன் பின், 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கையும் சரியில்லாததால், அவரை 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான விபினை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுக்குள் தற்போது விபினை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் மீரா தற்போது அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீரா வாசுதேவனின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது