1.தூக்கம்
ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் மிக அவசியமானது.
2.சூரிய ஒளி
காலை வெயிலில் குறைந்தது பத்து நிமிடங்கள் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது மூளையின் கடிகாரத்தை சீரமைக்கிறது. இது உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் தரும்.
3.ஸ்குவாட்ஸ் பயிற்சி
கால்களின் வலிமையானது மூளையின் ஆரோக்கியத்தோடும் வயதோடும் தொடர்புடையது.
4.வலிமைப் பயிற்சி
வாரத்திற்கு இருமுறை எடை தூக்கும் பயிற்சி செய்வது, மூளையின் நினைவாற்றல் பகுதியை பெரிதாக்க உதவுகிறது. தசை வலிமை மனதை பாதுகாக்கிறது.
5.ஊட்டச்சத்து மாத்திரைகள் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், ஏனெனில் எதையும் அதிகமாக எடுத்துக். கொள்வது நல்லது அல்ல.
6.சமூக உறவு
தனிமை என்பது மூளை சுருங்குவதோடு தொடர்புடையது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சமூகத்துடன் உரையாடுவது ஒரு சிறந்த மருந்தாகும்.
7.புதிய திறன்
ஒரு புதிய மொழியையோ அல்லது ஒரு வாத்தியம் வாசிப்பதையோ புதிய பொழுது போக்கையோ கற்றுக்கொள்ளுங்கள்.
8.ரசித்தல்
ஒரு நல்ல தருணத்தில் குறைந்தது இருபது வினாடிகள் நின்று அதை ரசியுங்கள்.
9.மன அழுத்தக் கட்டுப்பாடு
தொடர்ச்சியான மன அழுத்தம் சிந்திக்கும் திறனைக் குறைக்கிறது. அதை கட்டுப்படுத்த கற்று கொள்வது நல்லது.
10.அமைதி
பத்து நிமிடங்கள் அமைதியாக இருப்பது அல்லது தியானம் செய்வது மூளையின் கார்டெக்ஸ் பகுதியை தடிமனாக்குகிறது என்று ஸ்கேன் ஆய்வுகள் கூறுகின்றன. மூளையின் இந்தப் பகுதிதான் வயதாகும் போது முதலில் பலவீனமடைகிறது.