மோகன்லால் நடிப்பில் உருவான ‘ஹிருதயபூர்வம்’ மலையாள திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘துடரும்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘ஹிருதயபூர்வம்’. இந்தப் படத்தை மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.
சித்திக், பாபு ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் படத்தை தயாரித்துள்ளார். ரூ.12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.80 பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பெற்றது.
இந்தப் படம் வரும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.