இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம்.
ஒரு ஆங்கில ராணுவ அதிகாரி இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார். அவரிடம் ஒரு விலையுயர்ந்த பானம் (Sherry) இருந்தது. சில விசேஷமான நாட்களில் அவர் அதில் சிறிது மட்டும் குடித்துவிட்டு மிச்சத்தை பிறகு குடிக்கலாம் என்று சேமித்து வைப்பார். ஒரு நாள் அவர் அந்த பாட்டிலின் பானத்தின் அளவு, தான் குடிப்பதைவிட அதிகமாக குறைவதை கவனித்தார். தன் வேலைக்காரன் தான் இதை குடித்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். ஒரு நாள் இதை ஏன் மற்றவர் குடிக்க விட வேண்டும்? தானே குடித்து விடலாம் என்று முடிவெடுத்தவர், அதை முழுமையாக குடித்துவிட்டு அந்த பாட்டிலில் கொஞ்சம் சிறுநீரை ஊற்றி வைத்தார். அதன் பிறகும் அந்த பாட்டிலின் அளவு குறைந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அந்த பாட்டிலின் சிறுநீர் அளவு முழுமையாக குறையட்டும் என்று பலநாள் காத்திருந்தார்.
பிறகு அவர் அந்த வேலைக்காரனை அழைத்து “நான் இந்த பாட்டிலை பல நாட்களாக தொடவே இல்லை. ஆனால் அதன் அளவு எப்படி குறைந்தது? நீ என்ன செய்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு அவர் “ஐயா நான் உங்களுக்கு கொடுக்கும் சூப்பில் கொஞ்சம் Sherry ஐ தினமும் சேர்க்கிறேன்” என்றார்…..