இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்களில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். குண நலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டுமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை எண்ணியபடியே செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் அறிமுகம் உண்டாகும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வம் இன்மை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகளில் தாமதம் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
புதிய நபர்களால் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடி வரும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். துணைவர் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு
துலாம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்பு குண்டான மதிப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உல்லாச பயணம் செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடினமான நுட்பங்களையும் புரிந்து கொள்வீர்கள். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
தனுசு
தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். அரசு விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். சிந்தனை போக்கில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். மனை விற்பனையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகரம்
மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பாள் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளின் தேடல்கள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். குடும்பத்தில் ஆதரவான சூழல் அமையும். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். உடல்நலனில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் மந்தமாக நடைபெறும். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்