தேன் + மிளகு தூள்
ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து பின்னர் அதில் மிளகை சேர்த்து வறுத்து நீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதை ஆற வைத்து அன்றைய நாளில் தேவைப்படும் போது குடிக்கலாம். சுவை ஒரு மாதிரிதான் இருக்கும்,
தேவைப்பட்டால் சீனியோ அல்லது நாட்டு சர்க்கரையோ போட்டுக் கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . இருமலும் தொண்டை கரகரப்பும் நீங்கும்.
சளியால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது, ஏற்கெனவே சாப்பிட்டதும் நெஞ்சில் நிற்பது போல் இருக்கும். அஜீரண கோளாறால் அவதிப்பட்டால் மிளகுத் தூளை தேனுடன் சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.
பாலில் கூட மிளகுத் தூளை கலந்து பருகலாம். இது கொலஸ்ட்ராலை கூட கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இதனால் இதய நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சூடு ஆறியதும் தேன் கலந்து சாப்பிடலாம்.
தேனும் மிளகும் சூட்டை கிளப்பக் கூடியவை. எனவே இதை பார்த்து அளவோடு பயன்படுத்துவது நல்லது. ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உண்ணவே கூடாது.
இது உடலை சுத்திகரிக்கிறது. கல்லீரலில் படிந்திருக்கும் படிவங்களை வெளியேற்றுகிறது.
மிளகு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மிளகை தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும்.
எனவே சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரை, மருத்துவமனை என செல்லாமல் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துங்கள்.
இது போன்ற வைத்தியக் குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி செயல்படவும்.