எடிசன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். தன்னுடைய அரிய கண்டுபிடிப்பான மின்சார பல்பு இந்த உலகத்தில் எத்தனை மாற்றங்களை உண்டாக்கப் போகிறது. இரவைப் பகலாக்கப் போகிறது'
என்பதை நினைக்கும்போதே எடிசனின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது..
சரி..இதை முதலில் நண்பர்களுக்கும் அருகே இருக்கிற அறிஞர்களுக்கும் வெளிப்படுத்துவோம் என முடிவு செய்தார்.
அனைவரையும் அழைத்து விளக்கம் தர ஆயத்தம் செய்தார். அந்த அறையில் உள்ளவர்கள் எடிசனின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்தனர்.எடிசன் தன் கண்டுபிடிப்பான பல்பு பற்றி சொல்லச் சொல்ல அவர்களின் ஆவல் அதிகரித்தது. எடிசன் தன் உதவியாளரை அழைத்து ,பக்கத்திலே இருக்கிற ஆய்வகத்திலிருக்கும் 'பல்பை' எடுத்துவரச் சொன்னார்.
.உதவியாளர் ஆய்வகத்திற்குச் சென்று மிக்க கவனத்துடன் அதனை எடுத்துவந்தார். எடிசனும் அறிஞர்களும் இருக்கும் அறையின் வாசலுக்கு வரும்போது அவர் கையிலிருந்து நழுவி ..கிழே விழுந்து 'படார்'..என பல்பு உடைந்தது..அனைவரும் பதறிப் போனார்கள். எடிசன் நிதானமாகச் சொன்னார்
"பிரச்னையில்லை..இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்தீர்கள் என்றால் மீண்டும் அதனைத் தயாரித்துவிடுவேன்.
அதனைத் தயாரிப்பதற்கான பொருட்கள் என்னிடம் உள்ளன ..அதுவரை பொறுத்திருங்கள்." என்று சொல்லிவிட்டுத் தன் ஆய்வகம் சென்றார்.
ஒருமணி நேரம் கழித்து வந்தார்.
"வெற்றிகரமாகத் தயாரித்துவிட்டேன்.."என்று சொல்லி, அதே தன் உதவியாளரை அழைத்து, "ஆய்வகத்திலிருந்து பல்பை எடுத்துவாருங்கள் " என்றார். அனைவரும் "அவரை அனுப்புகிறீர்களே இது சரியா?"..என்று கேட்டனர்.
அப்போது எடிசன் சொன்னார் ..
."பல்பு உடைஞ்சா அதை மீண்டும் செய்துவிடலாம். ஆனால் ஒருவரின் மனசு உடைஞ்சா அதை சரி பண்ண யாராலும் முடியாது.!"
எத்தனை பேர் மனசை உடச்சிருப்போம் . அவர்களைச் 'சரியான பல்பு'ன்னு கேலியும் செய்கிறோம். மாறுவோம்.