முட்டைகோஸில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின், சல்பர் போன்ற அனைத்துவிதமான தாதுக்களும் உள்ளன. இச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவேண்டுமானால் பெரும்பாலும் பச்சையாகவே சாறெடுத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.
வேகவைத்த கோஸைவிட வேகவைக்காத கோஸ் எளிதில் செரிமானமாகும். இதில் வைட்டமின் ஏ. பி. சி. மற்றும் யு ஆகியவை உள்ளன.
முட்டைகோஸின் மருத்துவ குணம் என்று எடுத்துக் கொண்டால் சிறுகுடலைத் தூண்டி அதைச் சரியாக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.
பச்சை முட்டைகோஸின் சாறு மலச்சிக்கலைப் போக்கும். முட்டைகோஸ் சாறு இரைப்பை, முன் சிறுகுடல் புண்ணை ஆற்றும். செரிமானப் பகுதியில் பெப்சின் என்ற அமிலம் சுரந்து இரைப்பை அரிக்கப்படுவதை கோஸ் தடுத்து விடுகிறது. சமைக்கும்போது அழிந்துவிடும் கோஸின் சத்துக்கள்
பச்சையாக சாப்பிடும்போது முழுமையாகக் கிடைக்கிறது.
