Feed Item
·
Added a post

நெல்லி இலைகளை அவித்த நீரினால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் ஆறிவிடும்.

வாய்ப்புண் ஏற்பட்டால் மணத்தக்காளியைப் பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிடுவது பலன் தரும். வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிடுவதும் குணம் தரும்.

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.

பொன்னாங்கண்ணி இலைச்சாறு (100 மிலி), கரிசலாங்கண்ணிச் சாறு (100 மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

அதில் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

அகத்திக்கீரை சாற்றில் (200 மிலி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மிலி) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைல பதத்தில் இறக்கவும்.

இதைத் தினமும் அதிகாலையில் 5 மிலி (1 ஸ்பூன்) அளவுக்குச் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் (30 மிலி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.

புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் விய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

  • 146