Feed Item
·
Added joke

இரண்டு பெண்மணிகள் அமர்ந்து ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் .

அம்மணி 1: என் முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் எனக்கு ஒரு வைர அட்டிகை வாங்கித் தந்தார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: இரண்டாவது குழந்தை பிறந்த போது World டூர் கூட்டிண்டு போனார் ...

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: மூன்றாவது குழந்தை பிறந்ததும் இப்போ நாங்க இருக்கற பங்களாவை வாங்கி குடுத்துட்டார் ....

அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...

அம்மணி 1: உனக்கு குழந்தைகள் பிறக்கும் போது உன் கணவர் என்ன பண்ணினார் ?

அம்மணி 2: என்னை காந்தி மாதர் தமிழ் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார் ...

அம்மணி 1: அங்கே என்ன கத்துகிட்டே ?

அம்மணி 2: உன்னைய மாதிரி திமிரு பிடிச்ச பொம்பளைங்க பேசும்போது

" போடி " அப்படின்னு சொல்றதுக்கு பதிலா " அவருக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்ல கத்துக்குடுத்தாங்க ....

  • 33