Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்​பார்த்த உதவி தக்க சமயத்​தில் கிடைக்​கும். தெளிவான முடிவு​களால் தொல்லைகள் நீங்​கும். யோகா, ஆன்​மிகத்​தில் நாட்​டம் உண்டு. அலு​வல​கத்​தில் இழுபறி​யாக இருந்த பணிகளை முடிப்​பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்​குதா​ரர் ஆதரவு தரு​வார்.

ரிஷபம்: குடும்​பத்​தா​ரின் ஒத்​துழைப்பு அதி​கரிக்​கும். சேமிக்​கும் எண்​ணம் தோன்​றும். பிள்​ளைகளால் பெரு​மையடைவீர். அலு​வல​கத்​தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது. வியாபாரத்​தில் வேற்​றுமொழி வாடிக்​கை​யாளர்​கள் வரு​வார்​கள்.

மிதுனம்: மனக்​குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். சோம்​பல் வில​கும். முக்​கிய பிர​முகர்​களின் உதவியுடன் காரியங்​களை விரைந்து முடிப்​பீர். அரசால் அனுகூலம் உண்​டாகும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

கடகம்: சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் காரியத் தடைகள் வரலாம். வெளிவட்​டாரத்​தில் நிதானம் தேவை. பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர். வாக​னத்​தில் கவனம் தேவை. வியாபாரத்​தில் போட்​டிகளை எளிதாக சமாளிப்​பீர். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும்.

சிம்​மம்: ஒதுங்​கி​யிருந்த உறவினர், நண்​பர்​கள் ஓடி வந்து பேசுவார்​கள். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். தொல்லை தந்த வாக​னத்தை மாற்​று​வீர்​கள். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

கன்னி: பழைய பிரச்​சினைகளுக்கு மாறு​பட்ட அணுகு முறை​யால் தீர்வு காண்​பீர்​கள். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கூடும். அலு​வல​கத்​தில் அதி​காரி​கள் முக்​கிய அறி​வுரை தரு​வர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்​கள்.

துலாம்: அரசு காரியங்​களில் இருந்து வந்த தடைகள் வில​கும். வெளிவட்​டாரத் தொடர்பு அதி​கரிக்​கும். பயணங்​கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்​தில் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். குழப்​பம் நீங்கி அலு​வல​கத்​தில் நிம்​மதி உண்டு. மேலதி​காரி​களின் ஆதரவு கிட்​டும்.

விருச்​சிகம்: அவசரத்​துக்கு கைமாற்​றாக வாங்​கி​யிருந்த தொகையை தந்து முடிப்​பீர். பணவரவு திருப்தி தரும். உறவினர் மத்​தி​யில் மதிப்பு உயரும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்​கள். வியாபாரம் விறு​விறுப்​பாக அமையும். பாக்​கி​கள் வசூலாகும்.

தனுசு: வெளிவட்​டாரத்​தில் கௌரவப் பத​வி​கள் தேடி வரும். மனைவிவழி​யில் ஒத்​துழைப்பு அதி​கரிக்​கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்​டாகும். வாக​னப் பழுது நீங்​கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்​கலாம். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும்.

மகரம்: குடும்​பத்​தினரிடம் விட்​டுக் கொடுத்து போவது நல்​லது. திட்​ட​மிட்ட வேலையை முழு மூச்​சுடன் முடித்​துக் காட்​டுவீர். உறவினர், நண்​பர்​களை சந்​தித்து மகிழ்​வீர். வியாபாரத்​தில் நிம்​மதி​யுண்டு. பங்​குதா​ரர் ஆதரிப்​பார். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை இருக்​கும்.

கும்​பம்: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் பிள்​ளைகளின் பிடிவாதம் அதி​கரிக்​கும். வாக​னம் செலவு வைக்​கும். உடல்​நலத்​தில் அக்​கறை செலுத்​தவும். அலு​வல​கத்​தில் யாரை​யும் குறை சொல்ல வேண்​டாம். பொறுப்​பு​கள் கூடும். வியாபாரத்​தில் போட்​டிகள் இருக்​கும்.

மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்​புடன் செயல்​படுவீர்​கள். அதி​காரப் பத​வி​யில் இருப்​பவர்​கள் நட்​புறவாடுவார்​கள். தொல்லை தந்த வாக​னத்தை மாற்​று​வீர்​கள். வியாபாரத்​தில் புது சரக்​கு​களை கொள்​முதல் செய்​வீர். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

  • 137