இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதர பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கடகம்
எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
சிம்மம்
விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
தனுசு
சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். முடிவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்