நடிகை ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தவர் திருமணம் செய்யாமல் ஆண் குழந்தை பெற்றார். ஆனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கும் சமீபத்தில் அழகிய குழந்தை பிறந்தது.
ஏற்கெனவே உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை ஏமி ஜாக்சன் இப்போது அதைவிட மிகவும் ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.