Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

ரிஷபம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மிதுனம்

புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கடகம்

எதிலும் புத்துணச்சியுடன் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் லாபம் மேம்படும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை விலகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வாகன பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கன்னி

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த இலக்குகள் பிறக்கும். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். நெருக்கம்வர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

குடும்ப பெரியவர்ளிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழுவீர்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளால் வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

தனுசு

பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்கள் மூலம் புதிய அறிமுகமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. நண்பர்களிடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவண சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபர போட்டிகள் ஓரளவு குறையும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 105