Feed Item
·
Added a post

காரைக்குடி பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் முருகன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்குச் சொந்தமாகப் பெரிய வீடு இல்லை, பெரிய கார் இல்லை. ஆனால் அவரிடம் பச்சை பசேல் என்ற வயலும், வியர்வையில் விளைந்த நெல்லும் இருந்தது. காலையில் சூரியன் உதிக்கும் முன்பே வயலுக்குப் போய் விடுவார். சேற்றில் கால் வைத்து, வெயிலில் நின்று, மழையில் நனைந்து உழைப்பார்.

ஒரு நாள் அவரது மகன், அப்பா நாம் ஏன் விவசாயம் செய்ய வேண்டும், நகரத்துக்குப் போய் வேறு வேலை பார்க்கலாமே என்று கேட்டான். முருகன் சிரித்துக் கொண்டே மகனை வயல் வரப்பில் உட்கார வைத்தார். மகனே, நான் விதைக்காவிட்டால் நாட்டில் யாரும் சோறு சாப்பிட முடியாது. டாக்டரும், ஆசிரியரும், அதிகாரியும் கூட என் வயலில் விளைந்த சோற்றைத் தான் சாப்பிடுகிறார்கள். இது தான் டா என் பெருமை என்றார்.

அன்று மகனுக்குப் புரிந்தது. விவசாயி என்பவர் வெறும் வேலைக்காரர் அல்ல, உலகத்துக்கே சோறு போடும் சாமி. மண்ணைத் தொட்ட கை தான் உலகத்தைக் காப்பாற்றுகிறது. விவசாயியை மதிப்பவன் தான் மனிதனாக வாழ முடியும்.

  • 31