Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

மிதுனம்

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

கடகம்

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

சிம்மம்

சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கன்னி

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும்.சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் அறிமுகங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

துலாம்

எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். தெளிவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் வகையில் ஆதாயம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

வியாபாரம் ரீதியான ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கும்பம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.கணவன் - மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

  • 177